சுடச்சுட

  

  பணத் தட்டுப்பாடு பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஆட்சியர்

  By DIN  |   Published on : 11th December 2016 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் நிலவி வரும் பணத் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
  மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைக்காக பணம் எடுப்பதற்காக வங்கிகள், ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும் இந்த நிலை மாறவில்லை.
  மாவட்டத்திலுள்ள 234 வங்கிகளில் இதுவரை ரூ.1,800 முதல் ரூ.1,900 கோடி வரை பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், வங்கிகள் மக்களுக்கு ரூ.500 கோடிகள் வரை மட்டுமே திருப்பி வழங்கியதாகக் தெரிகிறது.
  ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வங்கிகளில் ஒரு நபருக்கு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வீதம் சரிவர பணம் வழங்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அறிவிப்பின்படி ஏடிஎம்களிலும் நாளுக்கு ரூ.2,500 வீதம் எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். மாவட்டத்திலுள்ள 376 ஏடிஎம் மையங்களில் 90 சதவீதம் பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்டுள்ளன. புதிய ரூ.500 நோட்டுகள் கடலூர் மாவட்டத்தில் மக்களிடம் போதிய அளவில் புழக்கத்துக்கு வராததால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
  இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறுகையில், மாவட்டத்தில் வங்கிகளில் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும், வரும் திங்கள்கிழமை வங்கியின் மூத்த அலுவலர்கள், ரிசர்வ் வங்கி அலுவலர்களுடன்
  ஆலோசனைக் கூட்டம் நடத்தி பணத் தட்டுப்பாட்டினை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai