சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் எஸ்.கனகசபை வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலர் ஆர்.நந்தகுமார் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் சரவணன், கோட்ட பொறுப்பாளர் மனோகரன், தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.ஸ்ரீதரன், மாவட்ட பொதுச் செயலர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.திருமாறன், விஜயரங்கன், தாமரை மணிகண்டன், கோசலை, வசந்தா, பழனிராஜா, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
  தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பிறந்தநாளை
  (டிச.25) தேசிய நல்லாட்சி தினமாக நலத் திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு ஆதரவளித்த கடலூர் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பது. வாலாஜா ஏரியை தூர்வார உதவி செய்த அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் நெய்வேலி நிலக்கரி
  நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai