Enable Javscript for better performance
பைக் மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பைக் மோதி பெண் சாவு

    By DIN  |   Published on : 11th December 2016 01:45 AM  |   அ+அ அ-   |    |  

    வேப்பூர் அருகே உள்ள ஏ.சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் க.சன்யாசி (59). இவரது மனைவி மூக்காயி (50), வெள்ளிக்கிழமை விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.
    அப்போது சேலம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மூக்காயி மீது மோதியது.
    இதில் பலத்த காயமுற்றவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    பின்னர் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்காயி அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
    வருகின்றனர்.

     

    kattana sevai