சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் ஏடிஎம் சேவை ஞாயிற்றுக்கிழமை முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
     கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையினால் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் பொதுமக்கள் வங்கி, ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் பெற்றுச் செல்கின்றனர். எனினும் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இங்கு செயல்பட்டு வரும் 234 வங்கிக் கிளைகளுக்கும் போதுமான அளவுக்கு பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வங்கிநிர்வாகத்தினர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஏடிஎம் மூலமாகவும் பணம் வழங்குவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால், மாவட்டத்தில் மொத்தமுள்ள 376 ஏடிஎம்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஏடிஎம்கள் திறந்திருந்தன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விரல் விட்டு எண்ணும் வகையிலான ஏடிஎம் மையங்கள் மட்டுமே இயங்கின.
     கடலூர் நகரில் 25-க்கும் அதிகமான ஏடிஎம்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மட்டுமே செயல்பட்டது. மற்றவை அனைத்தும் பணம் இல்லாத காரணத்தால் மூடப்பட்டிருந்தன. இதனால் தொடர்ந்து 2 நாள்கள் பணம் எடுப்பதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai