சுடச்சுட

    

    பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
     கிளைச் செயலர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைச் செயலர் உத்தண்டராமன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலர் பி.துரை சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் பி.முத்துகுமரன், மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினர் ஜெ.சிவக்குமார், விவசாய சங்கச் செயலர் ஆர்.பன்னீர்செல்வம், ரேணுகா செல்வகாந்தி, கந்தசாமி, கனகராணி, ஆறுமுகம், ஜோதி, லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெங்கடேசன் நன்றி கூறினார்.
     தீர்மானங்கள்: காடாம்புலியூர் கூனான்குளத்தை தூர்வாரி அழகுபடுத்தி அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவரை பணியமர்த்த வேண்டும். நியாயவிலைக் கடையில் மாதம் முழுவதும் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai