Enable Javscript for better performance
சசிகலா தலைமை கோரி அதிமுகவினர் பைக் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    சசிகலா தலைமை கோரி அதிமுகவினர் பைக் ஊர்வலம்

    By கடலூர்,  |   Published on : 12th December 2016 09:19 AM  |   அ+அ அ-   |    |  

    அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என வலியுறுத்தி விருத்தாசலத்தில் அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
     விருத்தாசலம் நகரச் செயலர் வி.டி.கலைச்செல்வன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சன்னதி வீதியில் இருந்து தொடங்கிய பேரணி தென்கோட்டை வீதி, கடைவீதி, பாலக்கரை, ரயில் நிலைய சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலர் காமராஜ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலர் சோழன் சம்சுதீன், நிர்வாகிகள் நடராஜன், சரவணன், ஜோதி, அய்யப்பன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    kattana sevai