சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே சாராயம் பதுக்கல் தொடர்பாக இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
   பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பண்ருட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் கங்காதரன் தலைமையிலான போலீஸார்,
   எல்.என்.புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள முள்புதரில் சோதனை நடத்தினர்.
   அப்போது, அங்கு இருவேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 220 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
   இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சின்னையன் (55), ஜெயமூர்த்தி (45) ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai