சுடச்சுட

  

  சிதம்பரத்தில் சித்தர்கள் வாழ்வியல் நடுவம் அமைப்பு சார்பில் சித்தர்கள் வீதிவலம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
   சித்தர்களின் அரிய மருத்துவத்தை பரப்புவதற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோடும் வீதிகளில் மாதந்தோறும் அசுபதி நட்சத்திரத்தன்று சித்தர்கள் வீதிவலம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருமூலர் நட்சத்திரமான அசுபதி நட்சத்திர நாளான சனிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயில் பிரதான வீதிகளில் திருமுறைகளை பாடியபடி சித்தர்கள் வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
   சித்தர்கள் வாழ்வியல் நடுவம் அமைப்பின் மாநில துணைத் தலைவர் சி.டி.அப்பாவு தலைமை வகித்தார். தீர்த்தமலை ஆதீனம் வைத்தியலிங்க சுவாமிகள், மாநிலத் தலைவர் குமரிநம்பி, பொதுச் செயலர் திருவாசகம், வைத்தீஸ்வரன் கோயில் மெய்கண்டார், பழையார் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், பாலாஜி, கோவிந்தராஜ், பாலமுருகன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சித்தர்களும் பங்கேற்றனர்.
   நிறைவாக, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சித்தர்களின் மருத்துவம் பற்றியும், அறுவை சிகிச்சையின்றி நோய்களை குணப்படுத்தும் மூலிகை மருந்துகள் பற்றியும், இயற்கை உணவு பற்றியும் பேசினர். திருக்கோவிலூரில் 9 ஏக்கர் பரப்பில் மூலிகை செடிகளைப் பயிரிடுவது என முடிவு செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai