சுடச்சுட

    

    சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கக் கோரிக்கை

    By சிதம்பரம்,  |   Published on : 12th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
     இதுகுறித்து கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளதாவது: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வசிப்போரில் பெரும்பாலோர் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
     இப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சி, புயல், வெள்ளம் என மாறி மாறி ஏற்படும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
     இதன் காரணமாக விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடன் பெற்று விவசாயம் செய்தவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாற்று வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு இப்பகுதி விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
     இந்த ஆண்டு சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் போதிய நீரின்றி முற்றிலும் கருகி வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
     எனவே அவர்களின் நலன் கருதி அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளை தமிழக அரசு வறட்சிப் பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai