சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சனிக்கிழமை ஊராட்சிப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
   குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொளக்குடி, நைனார்குப்பம், கல்குணம், பூதாம்பாடி, குருவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை, மேலப்புதுப்பேட்டை, ஆடூர்அகரம், கொத்தவாச்சேரி, சிறுபாளையூர், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், கருங்குழி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
   பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கால் ஓடையில் நடைபெறும் தூர்வாரும் பணிக்காக என்எல்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கொளக்குடியில் வடக்குப் பக்க கரை மேம்படுத்தப்பட்டபோதிலும், மறுபக்க பகுதி மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்குறைகளை மாவட்ட நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
   மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது ஒன்றியச் செயலர்கள் சிவக்குமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பி.பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   திங்கள்கிழமை (டிச.12) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும்,
   மாலை 3 மணி முதல் இரவு வரை வடலூர் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai