சுடச்சுட

  

  மாநில அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
   கோவையில் மாநில அளவிலான கடற்கரை கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் 10 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில், கடலூர் மாவட்ட அணி சார்பில் நெய்வேலி, 28ஆவது வட்டத்தில் உள்ள மாதிரி ஜவஹர் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு
   மாணவர் நகுல் கலந்துகொண்டார். இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கடலூர் மாவட்ட அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது.
   கடந்த 2015ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் நகுல் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்ட மாணவர் நகுல் மற்றும் பயிற்சியாளர் ரவீந்திரனை, ஜவஹர் பள்ளிகளின் செயலரும், என்எல்சி சட்டத் துறை முதன்மை மேலாளருமான சத்தியநாராயணமூர்த்தி, பள்ளி முதல்வர் மருதாத்தாள், தலைமை ஆசிரியை சித்ரா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai