சுடச்சுட

  

  மிலாது நபியை முன்னிட்டு மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்த நாள் மிலாது நபியாக டிச.13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், மது அருந்தும் இடங்கள் அனைத்தும் டிச.13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
   எனவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் அனைத்து மதுபானக் கடைகள், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தால், கடை மேற்பார்வையாளரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai