Enable Javscript for better performance
வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: இன்று 4ஆவது சோமவார விழா- Dinamani

சுடச்சுட

    

    வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: இன்று 4ஆவது சோமவார விழா

    By நெய்வேலி,  |   Published on : 12th December 2016 09:21 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
     நிகழ்ச்சியில் சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. நந்திதேவர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
     அவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிவபெருமான்- அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
     இன்று 4ஆவது சோமவார விழா: இக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இதுவரை 3 சோமவார நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளன. 4ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
     இதனையொட்டி அன்று மதியம் 2 மணிக்கு வீரட்டானேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
     கார்த்திகை: திங்கள்கிழமை கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு, வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai