Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

    By கடலூர்,  |   Published on : 14th December 2016 08:54 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை, போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
     விருத்தாசலம் அருகே உள்ள கோ.பொன்னேரி பேருந்து நிறுத்தத்தில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சடலத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.
     

    kattana sevai