சுடச்சுட

  

  ஒப்பந்தத் தொழிலாளர் விடுதலை முன்னணி கருத்தரங்கம்

  By நெய்வேலி,  |   Published on : 14th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடலூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான, ஒப்பந்தத் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
   புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் பழனிசாமி தலைமை வகித்துப் பேசுகையில், தொழிலாளர்களிடம் ஒற்றுமையின்மையை முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.
   தொடர்ந்து, என்எல்சி நிறுவன எஸ்.எம்.இ. ஆபரேட்டர் அசோசியேஷன் சிவசண்முகநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், தெலுங்கானா காண்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் (சிங்கர் நிலக்கரி சுரங்கம்) வெங்கண்ணா, மஸ்தூர் சிங் சமிதி பொதுச் செயலர் பச்சாஸ்சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
   கருத்தரங்கில் ஐஎப்டியு பொதுச் செயலர் பிரதீப் ஆற்றிய சிறப்புரையில், சுரங்கத் தொழிலாளர்களின் 2ஆவது சர்வதேச மாநாடு தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 2 முதல் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் என்எல்சி உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai