சுடச்சுட

  

  கார்த்திகை பெளர்ணமி: திருவதிகை கோயிலில் கிரிவலம்

  By நெய்வேலி,  |   Published on : 14th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கார்த்திகை மாத பெளர்ணமியையொட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மாடவீதியில் திரளான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தனர்.
   இந்தக் கோயிலில், மாதந்தோறும் பெüர்ணமியன்று சிறப்புப் பூஜையும், மாட வீதியை பக்தர்கள் 16 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கார்த்திகை மாத பெüர்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
   மாலை 6 மணி முதல் மாட வீதியை திரளான பக்தர்கள் வலம் வந்தனர். இரவு 7 மணி முதல் 12 மணிவரை பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
   இதனைத்தொடர்ந்து, இரவு 11 மணிமுதல் 12 மணிவரை மூலவர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பெüர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு பலர் அன்னதானம் வழங்கினர்.
   கலை நிகழ்ச்சி: அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில், 52ஆவது பெüர்ணமி நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
   விழுப்புரம் கம்பன் கழகச் செயலர் மு.ச.சங்கரன் பங்கேற்று, பெரியபுராணத்தில் மங்கையரின் மாண்பு என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
   அபிநயா, கவி கிருஷ்ணா மற்றும் கலைசோலை நாட்டியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பர் இல்ல அறக்கட்டளை நிறுவனர் மு.சக்திகணபதி, ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், எஸ்.வைரக்கண்ணு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai