சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்களிடம் புதன்கிழமை குறைகளை கேட்டறிகிறார்.
     இவர் தனது தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, குமலங்குளம், விலங்கல்பட்டு, வானமாதேவி, திருமானிக்குழி ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி முதல் கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை, ராமாபுரம், காரைக்காடு, அன்னவல்லி, சேடப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மக்களை சந்திக்கிறார். எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எம்எல்ஏவிடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai