Enable Javscript for better performance
சசிகலாவுக்கு கிழக்கு மாவட்ட அதிமுக ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    சசிகலாவுக்கு கிழக்கு மாவட்ட அதிமுக ஆதரவு

    By கடலூர்,  |   Published on : 14th December 2016 08:44 AM  |   அ+அ அ-   |    |  

    அதிமுக பொதுச் செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
     கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்தீர்மானங்கள் தொடர்பாக கட்சியின் அனைத்துத் தரப்பு நிர்வாகிகளிடமும் கையெழுத்து பெறப்பட்டது.
     கூட்டத்துக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் சத்யா பன்னீர்செல்வம், வி.டி.கலைச்செல்வன், மருத்துவரணி மாநில துணைச் செயலர் எஸ்.பி.கே.சீனுவாசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கே.முருகுமணி, ஜி.ஜெ.குமார், வெ.பெருமாள்ராஜா, வ.கந்தன், ராம.பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், என்.காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     முன்னதாக நகரச் செயலர் ஆர்.குமரன் வரவேற்க, ஒன்றியச் செயலர் பி.வி.ஜெ.முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.
     
     

    kattana sevai