சுடச்சுட

    

    சிதம்பரம் மாணவருக்கு குடியரசுத் தலைவர் விருது

    By சிதம்பரம்,  |   Published on : 14th December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்தைச் சேர்ந்த சாரண மாணவருக்கு, குடியரசுத் தலைவரின் சாரணர் விருது வழங்கப்பட்டுள்ளது.
     புதுதில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத சாரண, சாரணியர் இயக்க விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழக அளவில் தேர்வு பெற்ற சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி சாரண மாணவர் எம்.ராஜவேலுவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார். விருது பெற்ற மாணவர் மற்றும் பயிற்சியளித்த சாரண ஆசிரியர் என்.வோலாயுதம் ஆகியோருக்கு, திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளிச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கே.செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai