சுடச்சுட

    

    வர்தா புயலால் பாதிப்புக்குள்ளான சென்னையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கடலூர் மாவட்ட மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
     சென்னை மாநகரை வர்தா புயல் திங்கள்கிழமை கடந்து சென்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை அதிகம் சந்தித்த அனுபவத்தையும், பயிற்சியையும் கடலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்திலிருந்து மீட்புப் பணிக்காக கருவிகளுடன் திங்கள்கிழமை இரவு ஆள்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
     அதன்படி வேளாண் பொறியியல் துறையிலிருந்து 38 மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் 5 பொறியாளர்கள் உள்பட 20 பேரும், ஊரக
     வளர்ச்சி முகமை மூலமாக 20 மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் 25 பேரும், கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம் நகராட்சிகளிலிருந்து மொத்தம் 190 பணியாளர்கள் 4 மரம் அறுக்கும் இயந்திரங்கள், மற்றும் தேவையான உபகரணங்களுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     மேலும் மின்சாரத் துறையிலிருந்து திங்கள்கிழமை 8 பொறியாளர்களுடன் 40 பேரும், செவ்வாய்க்கிழமை 40 பேரும் சென்று பாதிப்படைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையிலிருந்து 37 பேர் சாலை சீரமைப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
     கடலூர் மாவட்டத்திலும் புயல் பாதிப்புகள் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
     இதனால் அனைத்து அரசு அலுவலர்களும் தயார் நிலையில், பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால், புயலால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிந்ததும், சென்னைக்கு உதவிடும் வகையில் உடனடியாக மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai