சுடச்சுட

  

  புலியூர் கிராமத்தில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, பாஜகவினர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
   குறிஞ்சிப்பாடி ஒன்றியம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன்(70).
   இவரது குடிசை வீடு, மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அண்மையில் எரிந்து சேதம் அடைந்தது.
   இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய பாஜக தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலர் சக்திகணபதி, பிரசார அணி துணைத் தலைவர் ராஜசேகரன், வடலூர் நகரத் தலைவர் சாமிதுரை, கிளைத் தலைவர் வெள்ளையன், வீரசேகர் ஆகியோர், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட முத்தையன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai