சுடச்சுட

  

  நெய்வேலியில் அறிவியல் மையம் அமைக்கக் கோரிக்கை

  By நெய்வேலி,  |   Published on : 14th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலியில் அறிவியல் மையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   இந்த இயக்கத்தின், நெய்வேலி கிளை 14ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் எஸ்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எம்.ராணி, எஸ்.எஸ்.வாசன், துணைச் செயலர்கள் பி.சின்னப்பராஜ், எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமம் இயக்கச் செயலர் சாந்தி வரவேற்றார்.
   மாவட்டத் தலைவர் ஆர்.தாமோதரன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். கடந்த ஆண்டுக்கான செயல் அறிக்கையை கிளைச் செயலர் பி.ஜேம்ஸ் சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளர் எஸ்.பாலமுருகன் வாசித்தார்.
   மாவட்டச் செயலர் எஸ்.விக்டர் ஜெயசீலன், பொருளர் எஸ்.விஜயகுமார், புரவலர் பி.பி.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலர் எஸ்.ஸ்டீபன்நாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நெய்வேலியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் அமைக்க வேண்டும்.
   என்எல்சி நிறுவனம் நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயற்கை பேரிடர்களை தடுத்திட திட்டங்களை அமல்படுத்துவதுபோல், மாணவர்கள், பொதுமக்களின் கல்வி வளர்ச்சி, சுகாதாரம் ஆகிய துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
   மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. இயக்கத்தின் புதிய தலைவராக எஸ்.பாலகுருநாதன், செயலராக எஸ்.ஆனந்த் பிரசாத், பொருளராக எம்.மோகன், துணைத் தலைவர்களாக ஆர்.வெங்கடேசன், சிவக்குமார், ஜானகி, துணைச் செயலர்களாக வாசுதேவன், அனிதா சத்யம், பிரசன்னா, தாமரைச் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, நூர்நிஷா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai