சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி அறையில், மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரமூர்த்தி. இவரது மகள் நந்தினி (17). சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், பி.எஸ்ஸி., தோட்டக்கலைத் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
   இதற்காக பல்கலை. விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு தாயார் இல்லாததால், பாட்டி அவரை படிக்க வைத்துள்ளார்.
   மாணவி நந்தினி, விடுதியில் உள்ள தனது 361ஆம் எண் அறையில் செவ்வாய்க்கிழமை காலை மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அந்த அறையின் கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது.
   இதுகுறித்து விடுதி ஊழியர்கள் அளித்தத் தகவலின் பேரில், சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   விடுதி அறையில் போலீஸார் நடத்திய சோதனையில், நந்தினி தனது பாட்டிக்கு எழுதிய 4 பக்கம் கொண்ட கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், "ஆங்கில மொழி ரொம்ப சிரமமாக இருப்பதால், சரியாக படிக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து படிக்க வைத்தீர்கள். என்னால் முடியவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் நந்தினி குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
   முன்னதாக, கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற நந்தினி, அந்த முயற்சி பலனளிக்காததால் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai