சுடச்சுட

    

    பைக் விபத்தில் காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     அரியலூர், சிங்காரத்தெருவைச் சேர்ந்தவர் அ.செல்வம் (55). விவசாயியான இவர், திங்கள்கிழமை தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (48) கடலூர் மாவட்டம், இறையூர்-கண்டபங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதில் இருவரும் வாகனத்திலிருந்து கீழே விழுந்தில் காயமடைந்தனர் இருவரையும் அப்பகுதியினர் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செல்வம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai