போதையில் மயங்கி கிடந்தவர் சாவு
By நெய்வேலி, | Published on : 14th December 2016 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பண்ருட்டி அருகே மது போதையில் மயங்கிக் கிடந்த அடையாளம் தெரியாத நபர், மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் சமத்துவபுரம் ஆர்ச் அருகே, 45 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் மயங்கிக் கிடந்தார். அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து, காடாம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.