சுடச்சுட

  

  மீலாதுநபி: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

  By சிதம்பரம்,  |   Published on : 14th December 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மீலாதுநபியை முன்னிட்டு சிதம்பரம் நகர முஸ்லிம் மக்கள் சார்பில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டன.
   சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் 250 நோயாளிகளுக்கும், மாரியப்பாநகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 23 முதியோர்களுக்கும், சி.சி.டபுள்யூ மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகள் 50 பேருக்கும், மனவளர்ச்சி குன்றிய முதியோர் காபக்கத்தில் உள்ள 15 பேருக்கும் பிரட் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
   நிகழ்ச்சிக்கு இ.மகபூப்உசேன் தலைமை வகித்தார். மௌனவி கணியூர் இஸ்மாயில் நாஜி, ஏ.அஷ்ரப்அலி, எஸ்.சையத் ஜாகீர்உசேன், சையத் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லால்பேட்டை மௌனவி தளபதி ஷபீகுர் ரஹ்மான், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதியோர் இல்லத்தில் மதிய உணவுக்கான உதவித் தொகையை வழங்கினார். மேலும் முகமதுநாசர் என்பவரும் நன்கொடை வழங்கினர். மேலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த குளந்தைகளுக்கு தலைமை மருத்துவர் சுமதி முன்னிலையில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இ.முபாரக் அலி, எஸ்.ஏ.முஜிப் பாஷா, ப.முகமது அலிகான், ஆரிப், நுஸ்ரத் சுல்தானா, முகமது யூசூப், அப்துல் அலீம், சித்திகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai