சுடச்சுட

  

  வர்தா புயல் பாதிப்பு காரணமாக, கடலூரில் ரயில்கள் செவ்வாய்க்கிழமை தாமதமாக வந்து சென்றன.
   வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கள்கிழமை சென்னையில் கரையைக் கடந்தது. அப்போது, மின் கம்பங்கள் சரிந்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
   இதனால், திங்கள்கிழமை இரவு கடலூர் வரவேண்டிய திருச்செந்தூர் விரைவு ரயில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய சோழன் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
   திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில், செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாக வந்தது. அதேபோல் வாரணாசி-ராமேஸ்வரம் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக கடலூர் வந்தது.
   சிறப்பு ரயில்கள்: திருச்சியிலிருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்துக்கு டிச.19, 26ஆம் தேதிகளில் அதிகாலை 3.08 மணிக்கு வந்துசேர்ந்து, 3.10 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் டிச.20, 27ஆம் தேதிகளில் இரவு 10.28 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் வந்து 10.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai