சுடச்சுட

    

    அம்பேத்கர் சிலைக்கு விசிக நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

    By நெய்வேலி,  |   Published on : 15th December 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முல்லைவேந்தன், தொகுதிச் செயலர் அறிவுடைநம்பி முன்னிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் குணத்தொகையன், ஸ்ரீதர், பாவாணன், கல்விச்செல்வன், சொக்கு, குருமூர்த்தி, தமிழரசன், பரா.முரளி, மாவட்ட அமைப்பாளர் சதீஷ், தொகுதி துணைச் செயலர் நாகவேந்தன், மாவட்ட துணைச் செயலர் அஸ்கர், கடலூர் நகர நிர்வாகிகள் கோபால், இமானுவேல், பூபாலன், சீனுவாசன், தனசேகர், மகி, தேவ், சசிதரன், பரதன், தினேஷ், மாயதேவன், கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் மு.கிட்டு, குறிஞ்சிப்பாடி தொகுதி துணைச் செயலர் கோபால், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன்,
     பொருளர் சம்பத், ஜானகிராமன், மாவட்ட நிர்வாகிகள் புருஷோத், விஸ்வநாதன், மகி, சிவலிங்கம், நடராஜன், கார்த்தி, மாறன், நகர நிர்வாகிகள் வீனஸ், கிஷோர், சதீஷ் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரச் செயலர்கள் சேதுராமன், ராஜதுரை நன்றி கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai