சுடச்சுட

  

  என்.எல்.சி. இந்திய நிறுவன சிஐஎஸ்எஃப் யூனிட் சனரஷிக்கா சார்பில், ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் டேனிஷ் மிஷம் பள்ளி மாணவர்களுக்கு குளிர் கால ஆடைகளை சிஐஎஸ்எஃப் துணை கமாண்டர் முகமது அனிப் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
   நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர்களின் துணைவியார்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சனரக்ஷிக்கா.
   இந்த அமைப்பு சமூக பொறுப்புணர்வு, பெண்கள் விழிப்புணர்வு, பொழுதுபோக்கு, கலாசார கலைகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் அகில இந்திய தலைவராக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் ஓபி சிங்கின் துணைவியார் நீலம்சிங் இருந்து வருகிறார். அந்த வகையில், நெய்வேலி, 19-ஆவது வட்டம், டேனிஷ் மிஷன் பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு குளிர் கால ஆடைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. என்.எல்.சி. இந்தியா நிறுவன யூனிட் பிரிவு துணை கமாண்டர் முகமது அனிப், அவரது துணைவியார் தபாசம் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு போர்வை, ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால ஆடைகளை வழங்கினர். துணை கமாண்டர் முகமது அனிப் பேசுகையில், கடின உழைப்புடன் கல்வி கற்க வேண்டும். ஏழ்மையும், இல்லாமையும்
   தடையில்லை. அதனை படிகற்களாக வைத்து முன்னேற வேண்டும். நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
   பள்ளித் தலைமையாசிரியர் சார்லஸ் ஜேம்ஸ், ஆய்வாளர்கள் எஸ்.கே.சர்மா, வசந்தன் செபஸ்டியா ன், உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, கே.என்.சாமி, தலைமைக் காவலர்கள் குழந்தைவேலு, நாகரத்தினம், லைசென் அலுவலர் சங்கர், ரகுவன்சி, பெண் காவலர்கள் சரளா, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai