சுடச்சுட

  

  கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
   கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.32.26 கோடி நிலுவைத் தொகை வழங்காததால், விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
   எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
   குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். அனைத்து கரும்பு விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai