சுடச்சுட

  

  குறைந்த ஆற்றலில் செயல்படும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்: தேசிய உற்பத்திக் குழு இயக்குநர் பேச்சு

  By நெய்வேலி,  |   Published on : 15th December 2016 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இயற்கை வளங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் குறைவான ஆற்றலில் செயல்படும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தேசிய உற்பத்திக் குழு இயக்குநர் பி.தர்மலிங்கம் வலியுறுத்தினார்.
   இயற்கை வளங்கள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு டிச.14 முதல் 20-ஆம் தேதி வரை ஆற்றல் சேமிப்பு வாரத்தை கடைப்பிடிக்கிறது.
   என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில், இதன் தொடக்க விழா, நெய்வேலி லிக்னைட் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
   விழாவில், தலைமை விருந்தினராக பங்கேற்ற என்.எல்.சி. நிறுவன சுரங்கத்துறை இயக்குநர் சுபீர்தாஸ் பேசியது: நெய்வேலி சுரங்கங்களில் சிறப்பான திட்டமிடுதலின் மூலம் ரூ.6.50 கோடி மதிப்பிலான டீசலும், சுமார் 23 கோடி யூனிட் மின் சக்தியும் சேமிக்கப்பட்டுள்ளது.
   மின் நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், எண்ணை, நிலக்கரி, பழுப்பு நிலக்கரி போன்ற இயற்கை வளங்களும் குறைந்து வருகின்றன.
   எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். கெüரவ விருந்தினராக பங்கேற்ற தேசிய உற்பத்திக் குழுவின் சென்னை மைய இயக்குநர் தர்மலிங்கம் பேசியது:
   குறைந்த மின் சக்தியை பயன்படுத்தி அதிக ஆற்றலை வழங்கும் நட்சத்திர குறியீடு கொண்ட கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
   200 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றிலிருந்த கரியமில வாயுவின் அளவு 10 லட்சத்தில் 150 பங்கு மட்டுமே, தற்போது, சுமார் 400 பங்காக உயர்ந்துள்ளது.
   இதனால் ஏற்படும் மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் வெப்பம் அதிகமாகி வட மற்றும் தென் துருவங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகமாகும் போது, உலகம் பெரிய ஆபத்தை சந்திக்கும். எனவே, இயற்கை வளத்தை குறைவாக பயன்படுத்தி கரியமல வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
   தலைமை உரை நிகழ்த்திய என்.எல்.சி. இந்தியா திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வகுமார் பேசுகையில், நெய்வேலி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களின் எண்ணிக்கையை, கன்வெயர் எடுத்துச் செல்லும் மேல் மண்ணின் எடையைப் பொறுத்து, தானியங்கி முறையில் அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும் நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார். விழா நிறைவில் கேந்திர வித்யாலயா மாணவர்கள் பங்கேற்ற, ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை என்.எல்.சி. இந்தியா நிறுவன இயக்குநர் சுபீர்தாஸ் தொடங்கி வைத்தார்.
   தொடர்ந்து, பிரதான அங்காடிப் பகுதியில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, ஆற்றல் சேமிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. என்.எல்.சி. இந்தியா நிறுவன திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல் துறைச் செயல் இயக்குநர் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது மேலாளர் பி.மணிவண்ணன் நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai