சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
     சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் அரங்கில், ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் அனைத்து அலுவலர்களும், நான், இதன் மூலம் பின்வருமாறு, உளமார உறுதியளிக்கிறேன்.
     நான், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன்.
     அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். நான், எவ்வித வேறுபாடுமின்றி, மனித உரிமைகளையும், அனைவரின் சுயமரியாதையையும் மதித்து நடப்பேன். நான், என்னுடைய சொல் அல்லது செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை, நேரடியாக அல்லது மறைமுகமாக மீற மாட்டேன்.
     மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்புக்காகவும் நான் எப்போதும் கடமைப் பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன் என உறுதியேற்றனர்.
     நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் எஸ்.எஸ்.குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெ.சண்முகம் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
     காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயக்குமார் தலைமையில், ஏடிஎஸ்பி-கள் ராமசாமி, வேதரத்தினம், டிஎஸ்பி-கள் நரசிம்மன், சிட்டிபாபு, ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரன், காவல்துறை அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளுநர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai