சுடச்சுட

  

  சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர், சிஐடியூ சங்க சாலையோர சிறு கடைத் தொழிலாளர்கள் புதன்கிழமை கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   கடலூர் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் சேட்டு தலைமை வகித்தார்.
   மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், செயலர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினர். மாநிலக்குழு டி.பழனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஸ்ரீதர், ஆர்.ஆளவந்தார், இணைச் செயலர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வி.ஆனந்தராராயணன், ஏ.பாபு உள்ளிட்டோர்
   பங்கேற்றுப் பேசினர்.
   ஆர்ப்பாட்டத்தின்போது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் சிறுகடை வியாபாரம் பாதிப்பு, சகஜ நிலை திரும்பும் வரை பழைய நோட்டுகளை அனுமதிக்க வேண்டும்.
   தமிழகம் முழுவதும் சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முறைப்படுத்தி அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சிறு கடை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடனை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai