சுடச்சுட

  

  தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ-என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர், நெய்வேலி, ஸ்கியூ பாலம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
   போராட்டத்துக்கு சிஐடியூ தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளர் வி.குப்புசாமி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். பொதுச் செயலர் டி.ஜெயராமன், பொருளர் எம்.சீனுவாசன், துணைத் தலைவர் எம்.மீனாட்சி நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெய்வேலி நகரச் செயலர் திருஅரசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
   இணைச் செயலர்கள் ஆர்.மணி, கே.மணி, ராஜப்பா, ஆரோக்கியதாஸ், மணிமாறன், சின்னதுரை, ராமமூர்த்தி, வேளாங்கன்னி, பாண்டியன், அரிராமன் உள்ளிட்ட சுமார் 150 பேர் பங்கேற்றனர். மாவட்டச் செயலர் பி.கருப்பையா சிறப்புரையாற்றி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai