சுடச்சுட

  

  பணியில் தூங்கிய கடவுப்பாதை காப்பாளர்: கம்பன் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

  By நெய்வேலி  |   Published on : 15th December 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கடவுப்பாதை காப்பாளர் தூங்கியதால் சமிக்ஞை கிடைக்காமல் கம்பன் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
   விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகையில் ரயில்வே கேட் உள்ளது.
   கடவுப்பாதை காப்பாளர் சிவமூர்த்தி செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தார்.
   காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.
   பண்ருட்டி திருவதிகை அருகே புதன்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் ரயில் வந்த போது, சமிக்ஞை கிடைக்காமல் ரயில் நிறுத்தப்பட்டது.
   ரயில் ஓட்டுநர் இறங்கிவந்து தூங்கிக் கொண்டிருந்த கடவுப்பாதை காப்பாளர் சிவமூர்த்தியை எழுப்பினார். மேலும், இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், பண்ருட்டி ரயில் நிலைய அதிகாரி புகழேந்திக்கும் தகவல் தெரிவித்தார்.
   இதைத் தொடர்ந்து, கடவுப்பாதைப் பாதை பூட்டப்பட்டதை அடுத்து, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai