சுடச்சுட

  

  பல்கலை. பேராசிரியர் மீது தாக்குதல் மருத்துவ மாணவரிடம் விசாரணை

  By சிதம்பரம்,  |   Published on : 15th December 2016 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது தாக்குதல் நடத்திய மருத்துவக் கல்லூரி மாணவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
   சிதம்பரம் அண்ணாமலைநகர் மீதிகுடி சாலையில் உள்ள சிவகாமி அம்மன் நகரில் வசிப்பவர் எஸ்.சிதம்பரராஜா (52). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடல்கல்வித் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
   புதன்கிழமை காலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முன் உள்ள வட்டச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த கன்னியாகுமரி மாவட்டம், கல்குளத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் சந்தோஷ்குமாரை (23) நிறுத்தி ஏன வேகமாகச் செல்கிறாய் எனக் கேட்டுள்ளார். அப்போது மாணவர் சந்தோஷ்குமார், பேராசிரியர் சிதம்பரராஜாவை எதிர்பாராதவிதமாக கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பேராசிரியர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார், பேராசிரியரை தாக்கிய மாணவர் சந்தோஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai