சுடச்சுட

    

    சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் உறுதி மொழியேற்பு மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
     வடலூர், ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
     பேரணி: தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
     பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு குரல் எழுப்பிச் சென்றனர்.
     நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி நிறைவில் பள்ளியை அடைந்தது. தலைமையாசிரியர்கள் சு.இளங்கோ, ரவிசங்கர், உதவித் தலைமையாசிரியர் ஜே.சந்திரமோகன், கலை ஆசிரியர் நாராயணன், உடல்கல்வி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai