சுடச்சுட

    

    மண்டல எறிபந்துப் போட்டி:  அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

    By சிதம்பரம்  |   Published on : 15th December 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டல அளவிலான எறிபந்துப் போட்டியில் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
     கடலூர் மாவட்டம், பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் எறிபந்து விளையாட்டில், கடலூரில் நடைபெற்ற குறுவட்ட போட்டியிலும், நெய்வேலியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான போட்டியிலும், விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதலிடத்தில் வந்துள்ளனர்.
     மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
     சிறப்பிடம் பெற்ற இந்த மாணவிகளையும்,அவர்களுக்கு பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியர் டி.கோவலன் ஆகியோரையும் செவ்வாய்க்கிழமை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் என்.பாலமுருகன் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai