சுடச்சுட

  

  வர்தா புயல் மீட்புப் பணி: சென்னைக்கு 25 மரம் அறுப்பு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

  By நெய்வேலி,  |   Published on : 15th December 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வர்தா புயல் தாக்கத்தால் சென்னையில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்காக, பண்ருட்டியில் இருந்து 25 மரம் அறுக்கும் இயந்திரங்கள் புதன்கிழமை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
   வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கள்கிழமை சென்னையைத் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.
   புயலின் கோர தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரிய கட்டடங்கள் முதல் குடிசைகள் வரை சேதமடைந்தன. மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சேதம் அடைந்தும், வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
   புயல் பாதித்த பகுதியில் மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
   இந்தப் பணியில் பயன்படுத்துவதற்காக பண்ருட்டியில் இருந்து 25 மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
   தானே புயல் பாதிப்பு மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரங்கள்,தற்போது, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
   இந்த இயந்திரங்களை, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாபெற்று சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai