சுடச்சுட

  

  அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு

  By நெய்வேலி,  |   Published on : 16th December 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி சார்பில், குறுவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
   நெய்வேலி, வட்டம்-20, என்.எல்.சி. நடுநிலைப் பள்ளி வளாகத்தில், குறுவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 21 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
   அதில், மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.எடிசன், கே.அரவிந்தன், ஜெ.சசிதரன், எஸ்.அன்புமணி, ஆர்.மதுமிதா, ஆர்.ஆர்த்தி ஆகியோர், தொழில் துறையில் புதுப்பிக்கத்தக்க வளம் சார்ந்த அறிவியல் மாதிரிகளை வைத்து, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.
   சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஏ.அமலதாஸ், டி.தேவசெல்லப்பா ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.கே.ஜேக்கப், உதவித் தலைமையாசிரியர் ஆர்.அசோகன் மற்றும் லட்சுமிநாராயணன், உடற்கல்வி ஆசிரியர் பி.சத்யாராஜ் ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai