சுடச்சுட

  

  ஆசிரியர் வீட்டில் வெள்ளிப் பொருள்கள், கார் திருட்டு

  By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநத்தத்தில் ஆசிரியர் வீட்டில் கார், வெள்ளிப் பொருள்கள் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
   திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சு.ஐயப்பன் (45). பெண்ணாடம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (44), அருகில் உள்ள லப்பைகுடிகாட்டில் தனியார் கல்வி மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
   இருவரும் புதன்கிழமை வழக்கம்போல் பணிக்குச் சென்றனர். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு அறையிலிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த சுமார் ஒரு கிலோ மதிப்பு வெள்ளிப் பொருள்கள் மற்றும் இரண்டாயிரம் மதிப்புள்ள சில்லறை காசுகளை திருடினர். மேலும், பூஜை அறையிலிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு, வெளியில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றனர்.
   இதுகுறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai