சுடச்சுட

    

    தனது கணவர், மகள் மாயமானது குறித்து பெண் ஒருவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
     வடலூர், புதுநகர், புதுத் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவருக்கும், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணமாகி, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.
     இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வடலூரில் உள்ள தனது தாய் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உமாமகேஸ்வரி தனது கணவர் சுரேஷ்குமார் மற்றும் மகளுடன் வந்திருந்தார்.
     இந்த நிலையில், 20.11.2015 அன்று சுரேஷ்குமார் தனது உறவினர்களை ஊருக்கு அனுப்பி வைக்க, வடலூர் ரயில் நிலையத்துக்கு மகளுடன் சென்றுள்ளார். ஆனால், இதுவரை இருவரும் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.
     இதுகுறித்து, உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai