சுடச்சுட

  

  கூடுதல் கடன் தொகை ஒதுக்கீடு கோரி கூட்டுறவுத் துறை கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

  By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் கூட்டுறவுத் துறை சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
   மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை, விவசாயிகளுக்குத் தேவையான வேளாண்மை கடன்களை வழங்கி வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் பேசுகையில், கரும்புக்கு ரூ.3 லட்சமும், நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது. இத்தொகை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் கடன் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
   இதுகுறித்து மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த பதிலால் திருப்தியடையாத விவசாயிகள், கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
   கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் கார்மாங்குடி வெங்கடேசன், சிறுப்பாக்கம் மணிகண்டன், குஞ்சிதபாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai