சுடச்சுட

  

  நெய்வேலியில் சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
   என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டுவரும் பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளில், சிநேகா வாய்ப்புச் சேவைகள் அமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு 78 சிறப்புக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கைத்தொழில், பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு சார்பில் சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா, நெய்வேலி லிக்னைட் அரங்கில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, அமைப்பின் தலைவி யோகமாயா ஆச்சார்யா தலைமை வகித்தார்.
   சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், சிறப்புக் குழந்தைகளை சரியான முறையில் பாதுகாத்து அவர்களுக்கு தகுந்த மறுவாழ்வு வழங்குவதன் மூலம், அவர்களையும் மற்றவர்களைப் போல வாழச் செய்ய முடியும். என்எல்சி நிறுவனம் நடத்திவரும் சிநேகா பள்ளி, சிறப்பாக இயங்க யாரையும் சார்ந்திராது, தனது முயற்சிகளின் மூலம் தேவையான உதவிகளை பெறும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அமைப்பின் செயலர் என்.ஜோதிகுமார் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்தும் உறுதிமொழியினை, நிதித் துறை பொது மேலாளர் எஸ்.மதிவாணன், அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பி.ரவி ஆகியோர் வாசித்தனர்.
   நிகழ்ச்சியில் என்எல்சி இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், பி.செல்வகுமார், ஆர்.விக்ரமன், தேவகி தங்கபாண்டியன், சாந்தி செல்வகுமார், சாந்தி விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   முன்னதாக அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஞானசம்பந்த மூர்த்தி வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai