சுடச்சுட

  

  ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் நினைவஞ்சலி

  By கடலூர்/நெய்வேலி  |   Published on : 16th December 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, 11ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றன.
   கடலூர் நகர அதிமுக சார்பில், மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமை வகித்து அஞ்சலி செலுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். வார்டு செயலர்கள் ஜெ.அன்பு, வி.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜி.வைத்தியநாதன், சிவா, ஏ.கே.சேகர், பி.லட்சுமணன், ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   கடலூர் நகர ஜெயலலிதா பேரவை மற்றும் 36ஆவது வார்டு சார்பில், கடலூர் முதுநகரில்
   ஜெயலலிதா உருவப் படத்துக்கு பேரவைச் செயலர் வ.கந்தன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் என்.ராமலிங்கம், அண்ணாநம்பி, கணேசன், பஞ்சநாதன், மணி, சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   விருத்தாசலம்: மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் விருத்தாசலம் நகர அதிமுக சார்பில் ஆலடி, விருத்தாசலம் காந்திநகர், அய்யனார் கோயில் வீதி,
   நான்குமுனை சாலை, கடைத்தெரு ஆகிய 5 இடங்களில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
   பேரவை மாவட்டச் செயலர் பி.ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.
   பண்ருட்டி: இதேபோல், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நகரச் செயலர் முருகன் தலைமையில், அவைத் தலைவர் வி.ராஜதுரை முன்னிலையில், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், நிர்வாகிகள் பி.சீனுவாசன், மாணிக்கம், ராஜேந்திரன், பூக்கடை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   காடாம்புலியூர்: காடாம்புலியூரில் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கி.தேவநாதன் மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
   நிகழ்ச்சியில், அக்ரோ தலைவர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜோதிபழனி, இந்திரா வடிவேல், புருஷோத்தமன், ஏழுமலை, தங்கமணி குணசேகரன், ராஜேந்திரன், கம்சலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய இணைச் செயலர் மாணிக்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், சரவணன், ஒன்றியப் பொருளர் சந்தானம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ராமதாஸ், ராதாகிருஷ்ணன், சின்னராசு, குருநாதன், செந்தில், தஷ்ணாமூர்த்தி, இளங்கோவன், ராமதாஸ், ரகுராமன், சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   நெய்வேலி: நெய்வேலி, வட்டம் 16-ல் உள்ள நடராஜர் கோயில் அருகே, அவைத் தலைவர் க.வெற்றிவேல் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
   இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகள், வார்டுகள், சார்பு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai