சுடச்சுட

  

  திருச்சி-கடலூர் துறைமுகம் பயணிகள் ரயிலை திருப்பாதிரிபுலியூர் வரை நீட்டிக்கப் பரிந்துரை: கோட்ட மேலாளர் தகவல்

  By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி-கடலூர் துறைமுகம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருப்பாதிரிபுலியூர் வரை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் கூறினார்.
   விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.கே.அகர்வால் தனி ரயிலில் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இதன்படி கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில், ரயில்வே மேலாளர் அலுவலகம், பயணச் சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, டிராலி மூலமாக திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்திலிருந்து, கம்மியம்பேட்டை பாலம் வரை சென்று இருப்புப் பாதையின் தரத்தை ஆய்வு செய்தார்.
   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்ற பாதுகாப்பு சோதனைகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெறுவதற்கு, ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தும் வகையில் "ஸ்வைப்’ இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்படும்.
   கடலூர் துறைமுகம் சந்திப்பிலிருந்து தினமும் காலை திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருப்பாதிரிபுலியூர் வரை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. கடலூரின் மையப் பகுதியாக திருப்பாதிரிபுலியூர் இருப்பதால், இந்த ரயிலை நீட்டிக்க வேண்டுமென திருச்சி கோட்டம் சார்பில் ரயில்வே கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, ரயில் நீட்டிப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
   அப்போது, ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் பி.சிவக்குமார், கோட்ட மேலாளரைச் சந்தித்து ரயில் நிலையத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கை முன்புறத்துக்கு மாற்ற வேண்டும். அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதையை சமன்படுத்தி சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
   அதனைத் தொடர்ந்து ஏ.கே.அகர்வால் கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோட்ட இயக்கவியல் அலுவலர் பிரசன்னா, சமிக்ஞை அலுவலர் மகேந்தர், இருப்புப் பாதை அலுவலர் பன்னீர்செல்வம், நிலைய மேலாளர்கள் பி.அசோக்குமார், சீனுவாசகோபாலன் ஆகியோர்
   உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai