சுடச்சுட

    

    நாளை 9 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

    By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் 9 வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (டிச.17) நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட 9 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதன்படி கடலூர் வட்டத்தில் மருதாடு, பண்ருட்டி வட்டத்தில் கீழ்அருங்குணம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ரங்கநாதபுரம், சிதம்பரம் வட்டத்தில் கீழ்பெரம்பை, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் சிவக்கம், புவனகிரி வட்டத்தில் தச்சக்காடு, விருத்தாசலம் வட்டத்தில் கொல்லிருப்பு, திட்டக்குடி வட்டத்தில் வள்ளிமதுரம், வேப்பூர் வட்டத்தில் சாத்தியம் ஆகிய கிராமங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
     எனவே, இந்த கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள், தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், வயது திருத்தம், பொது விநியோகம் தொடர்பான இதர மனுக்கள் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பங்களை முகாம்களில் வழங்கலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai