சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 65 ஆயிரம் செல்லிடப்பேசி கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
   இந்த கோபுரங்களை பராமரித்தல் மற்றும் நிறுவுதல் ஆகிய பணிகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் பிரித்து, டவர் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தனியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
   இதனை எதிர்த்து பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தன.
   இதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 675 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் அனைத்து அலுவல்களும் முடங்கின.
   இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி கடலூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai