சுடச்சுட

  

  புதிய பணப் பரிமாற்றக் கொள்கை: காங்கிரஸ் கண்டனம்

  By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர்கள் சீத்தாராமன், ரமேஷ், ராமச்சந்திரன், சிவா, குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்தத் தலைவர்கள் கே.ஐ.மணிரத்னம், ஏ.எஸ்.சந்திரசேகர், கோ.சூரியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
   மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஆற்றிய சிறப்புரை: 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. பஞ்சாயத்து தேர்தலுக்குக் கூட கூட்டணி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு கட்சி சென்று விட்டது. கட்சியை வலுப்படுத்தினால் மட்டுமே நம்மைத் தேடி மற்ற கட்சியினர் கூட்டணிக்கு வரும் நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
   கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் இ.எம்.சுப்ரமணியரெட்டியார் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
   மேலும், மாவட்டம் முழுவதும் கட்சியை பலப்படுத்துவது. மத்திய அரசின் புதிய பணப் பரிமாற்றக் கொள்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   மாவட்ட பொதுச் செயலர் ரவிக்குமார், பொருளர் ராஜன், நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கடலூர் நகரத் தலைவர் என்.குமார் வரவேற்றுப் பேசினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai