Enable Javscript for better performance
புதுவையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.2.24 லட்சம் மதுபானம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.2.24 லட்சம் மதுபானம் பறிமுதல்

    By கடலூர்,  |   Published on : 16th December 2016 08:17 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக கடத்திவரப்பட்ட ரூ.2.24 லட்சம் மதிப்பிலான மதுபானம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
     கடலூர் ஆல்பேட்டை காவல் நிலைய மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் க.திருமலைச்சாமி, ஆர்.வேதரத்தினம் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸார் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த வாகனத்தை தடுத்தனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஜெபஸ்டீன், உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, காவலர்கள் செல்வராஜ், ரமேஷ் ஆகியோர் அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். ஆனால், அந்த வாகனத்தில் சென்றவர்கள், அதனை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினர். போலீஸார் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள், தலா 180 மி.லி. கொண்ட 5,616 பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது.
     இதன் மதிப்பு ரூ.2.24 லட்சமாகும். இதையடுத்து போலீஸார் கடத்தல் மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai